தமிழகம் வெற்றி பாதையில் செல்ல மீண்டும்: தி.மு.க., ஆட்சியே தேவை ;காரம்பாக்கம் கணபதி

மதுரவாயல்: ''தமிழகம் வெற்றி பாதையில் செல்ல, திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்,'' என, காரம்பாக்கம் கணபதி தெரிவித்தார்.

மதுரவாயல் தொகுதியில், தி.மு.க., சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் காரம்பாக்கம் கணபதிக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதியில் மேற்கொண்ட வளர்ச்சி பணி பலனாக, மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

இம்முறையும் வெற்றி பெற, மதுரவாயல் தொகுதி முழுதும் பிரசாரம் செய்து வரும் அவர், மக்களுக்கு அவசிய தேவையான இரு உயர்மட்ட பாலம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தியது குறித்து, எடுத்துரைத்து வருகிறார்.

காரம்பாக்கம் கணபதி கூறியதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் சாலைகள், பூங்காக்கள், உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டியுள்ளோம். வளசரவாக்கத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த ஏரியை மீட்டு, பசுமை பூங்கா அமைத்துள்ளோம். இதுபோன்ற வளர்ச்சி பணி தொடர, பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைக்க வேண்டும்.

தமிழகம் வெற்றி பாதையில் செல்ல, திராவிட மாடல் ஆட்சி மீண்டும் வரவேண்டும். தமிழகம் எந்த காலத்திலும் பின்தங்காது என்பதை, ஐந்து ஆண்டு ஆட்சியில் நிரூபித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement