பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்-படும் மேற்கு தொகுதி த.வெ.க., வேட்பாளர் பிரசாரம்

சேலம்; சேலம் மேற்கு தொகுதியில், த.வெ.க., வேட்-பாளர் லட்சுமணன், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக 4வது கோட்டத்தில் அழகா-புரம், அரவான் சிலை, பாறை வட்டம், காட்டூர், மோளப்பட்டியான் வட்டம்; 5வது கோட்டத்தில், பெரியபுதுார் பிள்ளையார் கோவில் தெரு, பெரியார் நகர், திடீர் காலனி, மிட்டாபுதுார் ஆகிய பகுதிகளில், மக்களை சந்தித்து, லட்சுமணன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.


தொடர்ந்து அவர் பேசியதாவது:சேலம் மேற்கு தொகுதி சார்பில் என்னை வெற்றி பெறச்செய்தால், உங்கள் பிரச்னையை சட்டச-பையில் பேசி நிறைவேற்றி தருவேன். இத்தொ-குதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டு-மின்றி புது திட்டங்களை கொண்டு வந்து வளர்ச்சி அடைந்த முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்-டுவேன்.
மாணவர்களுக்கு பயிற்சி
அழகாபுரம், அரவான் சிலை ஆகிய பகுதிகளில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்-கப்படும். பாறை வட்டம் பகுதியில் தார்ச்சாலை, சாக்கடை வசதி செய்து தரப்படும். காட்டூர் மக்-களின் கோரிக்கையான மின் கம்ப வசதி, உயர்-கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரப்படும். மோனப்பட்டியான் வட்டத்தை சேர்ந்த மக்களின் கோரிக்கையான சாலை, சாக்கடை, தெருவி-ளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்த தரப்படும்.
விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர், இளைஞர்களை அடை-யாளம் கண்டு அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளித்து தேசிய போட்டிகளில் பங்கேற்கும்படி பயிற்சி அளிக்கப்படும்.
அடிப்படை வசதி
பெண்கள் பாதுகாப்புக்கு வேலு நாச்சியார் படை உருவாக்கப்படும். பல்வேறு தொழில் நிறுவ-னங்கள் இருந்து வந்தாலும் கூடுதலாக தனியார் நிறுவனங்கள் கொண்டு வந்து, உள்ளூர் இளை-ஞர்
களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க, நடவ-டிக்கை எடுப்பேன். தொகுதியில் எந்தெந்த இடங்-களில் குடிநீர் தட்டுப்பாடு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறதோ, அங்கு முன்னுரிமை அளித்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
கல்விக்கு முக்கியத்துவம்
மாணவ, மாணவியர் நலன் கருதி கல்விக்கு முக்-கியத்துவம் அளிக்கும்படி, அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட உட்கட்ட-மைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். வேலை இல்-லாதவர்
களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர அனைத்து தரப்பு மக்களும், த.வெ.க.,வுக்கு ஆத-ரவு அளிக்க வேண்டும். மாற்றத்தை தரும் தலை-வராக விஜய் உள்ளார்.
'விசில்' சின்னத்தில் ஓட்டு
தமிழக இளைஞர்களை பணி அமர்த்தும் நிறுவ-னங்களுக்கு ஊக்கத்தொகை, தொழில் தொடங்க, 'ஸ்டார்ட் அப்' கடன்கள் வழங்கப்படும். அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் போதை ஒழிப்பு பாது-காப்பு மண்டலங்கள் அமைக்கப்படும். போதைப்-பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு கடு-மையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் பங்கேற்பு அடிப்படையிலான ஆட்சி அமைக்கப்படும். தமிழகம் வெற்றி பாதையில் செல்ல, வேலையில்லா திண்டாட்டம் ஒழிந்து, படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு பெற்-றிட, வரும் சட்டசபை தேர்தலில், தலைவர் விஜய் கரத்தை வலுப்படுத்த, 'விசில்' சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement