சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
பொள்ளாச்சி: கோவை மாவட்ட சமரச தீர்வு மையம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பொள்ளாச்சி தாலுகா சமரச தீர்வு மையம் சார்பில், நேற்று முதல் சமரச விழிப்புணர்வு வாரம் நடக்கிறது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி, பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் துவங்கியது. சார்பு நீதிபதி மணிகண்டன், ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் பிரகாசம், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுஜாதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநாத் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர்.
பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் துவங்கிய பேரணி, தாலுகா அலுவலக ரோடு, காந்தி சிலை, சப்-கலெக்டர் அலுவலக ரோடு வழியாக சென்றது. சமரச விழிப்புணர்வு வாரம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
குடும்ப பிரச்னை, வாகன விபத்து இழப்பீடு, குடும்ப வன்முறை, காசோலை மோசடி, வர்த்தக பிரச்னை, சமரசத்துக்கு உட்பட்ட குற்றவியல், பாகப்பிரிவினை வழக்கு, இதர உரிமையியல் வழக்குகள்; வாடகை தகராறு, நில ஆர்ஜித வழக்கு, தொழிலாளர் வழக்கு, வங்கி கடன் வழக்குகள் சமரசத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நேரடியாகவோ அல்லது வக்கீல் வாயிலாகவோ சமரச மையத்துக்கு அனுப்பலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், வக்கீல்கள் மருதராஜ், அருள், வக்கீல் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வால்பாறை வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சமரச வழக்கறிஞர் முத்துசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு சமரச தீர்வு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி, மாஜிஸ்திரேட் மீனாட்சி பேசியதாவது:
மக்கள் பிரச்னைகளை நேரடியாக பேசி தீர்த்துக்கொள்ளும் வீதமாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் உத்தரவு படி சமரச மையம் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசு தனியாக சமரச வக்கீல் மற்றும் பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். சமரசத்தின் வாயிலாக, 11 வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.
கோர்ட்டில் நிறைய நடைமுறைகளை பின்பற்றி தான் வழக்குகளை நடத்த வேண்டியுள்ளது. இதனால் வழக்குகளை விரைந்து முடிக்க முடியாத நிலை உள்ளது. இருதரப்பினரும் விட்டு கொடுத்து பேசினாலே பல பிரச்னைகள் எளிதில் முடிவுக்கு வரும்.
உங்களது பிரச்னைகளுக்கு நீங்கள் தான் நீதிபதியாக இருந்து, பிரச்னைகளை பேசி முடிக்கலாம். சமரச மையத்தில் பிரச்னைகளை பேசி தீர்வு ஏற்பட்டால், அதில் கோர்ட் தலையிடாது. உங்களுக்குள் ஏற்பட்டுள்ள பகைமையை தீர்வுக்கு கொண்டு வர, உங்களது வழக்குகளை சமரசமாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை