முன்னாள் சென்ற லாரி மீது மோதிய லாரி:டிவைடரில் ஏறி நின்ற லாரிகள் ,டிரைவர் கால்கள் முறிவு

வேடசந்துார்:வேடசந்துார் அருகே இரு லாரிகள் ஒன்றுக்கு பின் ஒன்று மோதிய நிலையில் இரு லாரிகளும் டிவைடரில் ஏறி நின்றன. டிரைவரது இரு கால்களும் இடிபாடுகளில் சிக்கி முறிந்தன.

தர்மபுரியை சேர்ந்தவர் லாரி டிரைவர் வடிவேல் 37. இவர் துாத்துக்குடியில் இருந்து நிலக்கரியை ஏற்றிக்கொண்டு பெங்களூர் நோக்கி சென்றார். வேடசந்துார் விட்டல்நாயக்கன்பட்டி அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியது. இதை ஓட்டி வந்த தர்மபுரி பாப்பாரைப்பட்டி தவமணி 27, அதிகாலை 2:30 மணிக்கு துாக்க கலக்கத்தில் இருக்க கட்டுப்பாட்டை இழந்து மோதியது.தவமணியின் இரு கால்களும் இடிபாடுகளில் சிக்கி முறிந்தன. இவரை நீண்ட போராட்டத்திற்கு மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மோதிய வேகத்தில் இரு லாரிகளும் டிவைடரில் ஏறி நின்றது . வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement