சிறுமிக்கு பாலியல் தொல்லைவாலிபருக்கு 20 ஆண்டு சிறை
திருப்பூர்: திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகிளா கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
கடந்த, 2020 மார்ச் 23 அன்று, திருப்பூர் கே.வி.ஆர். நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, வடிவேலு, 33 என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வழக்கு விசாரணை, திருப்பூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கில் தீர்ப்பு வழங்கிய, நீதிபதி கோகிலா, வடிவேலுவுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கை சிறப்பாக கையாண்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருப்பூர் மாநகர கமிஷனர் பாராட்டினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குப்பை கழிவுகள் கொட்டி எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
-
வெயிலால் வறண்டு வரும் ஏரிகள் கவலையில் ஆழ்ந்த விவசாயிகள்
-
எல்லையம்மன் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
-
கடம்பத்துார் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்படும் பிரசாரத்தில் அ.தி.மு.க., பி.வி.ரமணா வாக்குறுதி
-
விவசாயிகள், நெசவாளர்களுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்துவேன் தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி உறுதி
-
தி.மு.க., வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் வி.சி., கட்சியினருக்கு திருமாவளவன் வேண்டுகோள்
Advertisement
Advertisement