பா.ஜ., - த.வெ.க.,வினர் மோதல்; தவளக்குப்பத்தில் பரபரப்பு

அரியாங்குப்பம்: ஓட்டுச்சாவடி அருகே ஓட்டு கேட்ட போது, பா.ஜ., - த.வெ.க., கட்சி ஆதரவாளர்கள் தாக்கி கொண்டதால், பரபரப்பு நிலவியது.

மணவெளி தொகுதி, தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே, 27வது ஓட்டுச்சாவடி அருகே, ஓட்டளிக்க சென்றவர்களிடம் த.வெ.க., வேட்பாளரின் ஆதரவாளர்கள் விசில் சின்னத்திற்கு ஓட்டு கேட்டனர்.

அவர்களிடம் பா.ஜ., வேட்பாளரின் ஆதரவாளர்கள், ஏன், ஓட்டுச்சாவடி அருகிலேயே நின்று கொண்டு ஓட்டு கேட்கிறீர்கள் எனக் கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி, இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதில், பா.ஜ., ஆதரவாளரான நடராஜனுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக தவளக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement