மற்றவர்களுக்கு தொகுதி குறித்து ஏதும் தெரியாது: அமைச்சர் கணேசன் பேச்சு
ராமநத்தம்: திட்டக்குடி தொகுதியில் தி.மு.க., சார்பில் அமைச்சர் கணேசன் போட்டியிடுகிறார். இதற்காக, கடந்த சில தினங்களாக, தொகுதி மக்களை சந்தித்து, தி.மு.க., அரசின் சாதனைகள், தொகுதியில் செயல்படுத்திய திட்டப்பணிகளை எடுத்துரைத்து ஓட்டு சேகரிக்கிறார்.
தொடர்ந்து, மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதர்நத்தம், ஆலம்பாடி, ஆவட்டி, ஆ.குடிகாடு, மேல் ஆதனூர், மேல் ஐவனுார் உட்பட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று ஓட்டு சேகரித்தார். அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்து பூக்களை துாவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அமைச்சர் கணேசன் பேசியதாவது:
நான் அமைச்சராக பொறுப்பேற்றதும், கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் தோறும் புதிய தார் சாலை போடப்பட்டது. புதிய பாலங்கள், குடிநீர், சிமெண்ட் சாலைகள் உட்பட தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றினேன்.
மகளிர் உரிமைத் தொகையை ரூ., 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுமென முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். கட்டணமில்லா பஸ் வசதி, காலை உணவுத்திட்டம், இல்லம் தேடி மருத்துவம் உட்பட பல சாதனைகளை நிறைவேற்றியுள்ளார். கடந்த 36 ஆண்டுகளாக நாம் அனைவரும் ஒன்றாக உறவாக பழகுகிறோம். ஆனால், மற்ற வேட்பாளர்களுக்கு தொகுதி குறித்து ஏதும் தெரியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், மங்களூர் முன்னாள் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், ஒன்றிய செயலர்கள் தி.மு.க., அமிர்தலிங்கம், ம.தி.மு.க., சம்பத்குமார், வரதராஜன், தே.மு.தி.க., ராஜமாணிக்கம், செல்வகுமார், வி.சி., அருண், சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
அரசியல் என்பது வாகனத்தில் அமர்ந்து கை காட்டுவது அல்ல; அண்ணாமலை விமர்சனம்
-
பிரதமர் மோடி ஏப்.,18ல் தமிழகம் வருகை; கோவை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
-
தோல்வியின் விரக்தியில் இருக்கிறார் இபிஎஸ்: நடைபயிற்சியின் போது ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
'பூத் சிலிப்' வழங்கும் பணி கலெக்டர் துவக்கி வைப்பு
-
தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் தான்; அரசியல் கள பரபரப்பு செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சு தோல்வி