நல்லாட்சி அமைந்திட அ.தி.மு.க.,விற்கு ஓட்டு போடுங்கள்: வேட்பாளர் விஜயா
விழுப்புரம்: விழுப்புரம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் விஜயா சுரேஷ்பாபு, வளவனுார் பகுதியில் ஆதரவு திரட்டினார்.
வளவனுார் பேரூராட்சி கூட்டுறவு நகரில், நேற்று காலை வீதிவீதியாகச் சென்று ஓட்டு சேகரி்தது பேசுகையில், 'அ.தி.மு.க., ஆட்சியில் விழுப்புரத்தில் அரசு சட்டக் கல்லுாரி, எம்.ஜி.ஆர்., மகளிர் கலைக் கல்லுாரி கொண்டு வரப்பட்டது.
கிராமப்புறங்களில் நீர்மேலாண்மையை பாதுகாக்க, குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னாள் முதல்வர் ஜெ., பெயரில் பல்கலைக் கழகம் துவக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. நல்லாட்சி அமைந்திட அ.தி.மு.க.,விற்கு மக்கள் ஆதரவு அளித்திட வேண்டும்' என்றார்.
தொடர்ந்து வளவனுார் பேரூராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர், வள்ளலாளர் நகர், காந்தி நகர், தொட்டி, பாலாஜி நகர், கே.எம்.என்., நகர், அம்பேத்கர் நகர், தொட்டியாந்தோப்பு, குமாரக்குப்பம் உட்பட பல்வேறு இடங்களில் ஆதரவு திரட்டினார்.
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, முருகன், பேரூராட்சி முன்னாள் சேர்மன் முருகவேல், முன்னாள் துணை சேர்மன் நாராயணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
குப்பை கழிவுகள் கொட்டி எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
-
வெயிலால் வறண்டு வரும் ஏரிகள் கவலையில் ஆழ்ந்த விவசாயிகள்
-
எல்லையம்மன் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
-
கடம்பத்துார் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்படும் பிரசாரத்தில் அ.தி.மு.க., பி.வி.ரமணா வாக்குறுதி
-
விவசாயிகள், நெசவாளர்களுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்துவேன் தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி உறுதி
-
தி.மு.க., வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் வி.சி., கட்சியினருக்கு திருமாவளவன் வேண்டுகோள்