சிறுமி பலாத்கார வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள்
திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதியில் இரு சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த உறவினர் உட்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு13, 12 வயதில் இரு மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்னையில் கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.
பெண்ணுக்கு தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியை சேர்ந்த விக்னேஸ்வரன் 36, உடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்யாமல் திண்டுக்கல்லில் தனியே வீடெடுத்து குடும்பமாக வசித்தனர். இதனிடையே சிறுமிகள் 2 பேரையும் விக்னேஸ்வரன் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதெரிந்த சிறுமிகளின் தாய் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் விசாரணையில் விக்னேஸ்வரன் மட்டுமல்லாது பெண்ணின் கணவரது நெருங்கிய உறவினர் முருகவேல் 41, என்பவரும் சிறுமிகளை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இருவரையும் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
முருகவேல், விக்னேஸ்வரன் இருவருக்கும் இரட்டை ஆயுள்தண்டனை விதித்து அவற்றை ஏககாலத்தில் அனுபவிக்கவும் திண்டுக்கல் போக்சோ நீதிமன்ற நீதிபதி சத்யதாரா தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசுத்தரப்பில் தலா 7.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.
அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.
மேலும்
-
வாடகை பாக்கியை கேட்ட ஆத்திரத்தில் பெண் கொலை பெயின்டருக்கு 'ஆயுள்'
-
'காப்பர்' பைப் திருடியவர் கைது
-
உதயநிதியை போல் பழனிசாமிக்கும் போக்குவரத்து நிறுத்தம்: மக்கள் அவதி
-
திரு.வி.க., நகரை தாரை வார்க்கும் தி.மு.க., கணக்கு தப்பானதாக கட்சியினர் புலம்பல்
-
போதை மாத்திரை விற்ற பெண் உட்பட மூவர் கைது
-
ஈரோட்டில் 104 டிகிரி வெயில்