இரட்டை கொலை நடந்த கிராமத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள பெரும்பத்து கிராமத்தில் இருவர் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவித்துள்ளனர்.

மார்ச் 3 ல் பெரும்பத்து கிராமத்திற்கு டூவீலரில் வந்த 7 பேர், ரோட்டோரம் இருந்த இருவரை வெட்டிக் கொலை செய்தனர். இதில் தொடர்புடைய 7 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களை கலெக்டர் சந்திக்கவில்லை. கொலைக்கு பின்னணியில் உள்ளவர்கள் குறித்து கூறப்படவில்லை என்பன உள்ளிட்ட கிராம மக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றவில்லை எனக்கூறி சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.கிராமத்தின் நுழைவாயிலில் தேர்தல் புறக்கணிப்பு குறித்து அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் கருப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை.

பெரும்பத்து ஊராட்சி முன்னாள் தலைவர் கோபிநாதன் கூறியதாவது:

அரசியல்வாதிகள் ஜாதியை விட்டு வெளியே வர வேண்டும். இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை யாரும் எங்களை சந்தித்து பேசவில்லை. எனவே வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றார்.--------

Advertisement