பைக் - லாரி மோதல் புதுமண தம்பதி உயிரிழப்பு
துாத்துக்குடி: விருதுநகர் மாவட்டம், கஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன், 32. இவரின் மனைவி மனீஷா, 22. கடந்த மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின், பைக்கில் ஊர் திரும்பிய போது, சாத்துார் சாலையில் உள்ள தனியார் கல்லுாரி அருகே, சிவகாசியில் இருந்து துாத்துக்குடி நோக்கி எதிரே வந்த லாரி, இவர்களின் பைக் மீது மோதியதில், மனோகரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மனீஷா, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்தார். கோவில்பட்டி கிழக்கு போலீசார், லாரி டிரைவர், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடை சேர்ந்த அபூபக்கரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 அதிகரிப்பு
-
வேலூரில் முதல்வர் ஸ்டாலின்; வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு
-
தமிழக சட்டசபை தேர்தல்; பாஜ தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
-
டில்லியில் துணை ஜனாதிபதி சிபிஆர் இல்லத்தில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை
Advertisement
Advertisement