அரசு திட்டங்கள் தொடர தி.மு.க.,வை ஆதரிக்க வேப்பனஹள்ளி தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக, மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், கூட்டணி கட்சியினர் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
மேலுமலை, பீர்பள்ளி, பிஜி துர்க்கம், சின்ன குதிபாலா, பஸ்தலப்பள்ளி, சின்ன கொத்துார், காளிங்கவரம், அக்ரஹாரம் உட்பட பல்வேறு கிராமங்களில், முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் மற்றும் கூட்டணி கட்சியினருடன் சென்று, வேட்பாளர் சீனிவாசன் நேற்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசும் போது, ''தி.மு.க., ஆட்சியில் மாணவ, மாணவியருக்கு காலை உணவு திட்டம், புதுமை பெண், தமிழ் புதல்வன் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன. இதை தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கவில்லை. ஆனால், ஏழை மாணவ, மாணவியருக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை கொண்டு வந்தார். இதுபோன்ற திட்டங்கள் தொடர, தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின், இரண்டாவது முறையாக முதல்வராக வேண்டும். அதற்கு, பொதுமக்கள் உதய
சூரியன் சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும். தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், 8,000 ரூபாய் கூப்பன் வழங்க உள்ளோம். அதன் மூலம் தேவையான பொருட்களை மக்கள் வாங்கி கொள்ளலாம்,'' என்றார்.
மேலும்
-
தேர்தலுக்கு 10 நாட்கள் தான்; அனல் பறக்கும் கள தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
-
ஜோசப் விஜய்- - உதயநிதிக்கு முதல்வராக தகுதி இல்லை
-
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தில் திடீர் மயக்கம்