வலிப்பால் குழந்தை பலி

தலைவாசல், சேலம் மாவட்டம் தலைவாசல், வரகூரை சேர்ந்தவர் திருமலைவாசுதேவன், 30. இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு, 2 ஆண் குழந்தைகள். சிறுவாச்சூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு, ஒரு வயது ஆண் குழந்தையுடன் லலிதா சென்றார்.

நேற்று அந்த குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது. ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை இறந்தது. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement