போதை மாத்திரை விற்ற பெண் உட்பட மூவர் கைது

எம்.கே.பி.நகர்: போ தை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

வியாசர்பாடி, முல்லை நகர் சுடுகாடு அருகே, போதை மாத்திரை விற்பதாக எம்.கே.பி.நகர் போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது.

போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட, கொளத்துார், அஜி நகரைச் சேர்ந்த சரவணன், 30, வியாசர்பாடி, எருக்கஞ்சேரியைச் சேர்ந்த கொடுங்கையூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தாரணி, 27, நெற்குன்றம், சக்தி நகரைச் சேர்ந்த கோயம்பேடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான தினேஷ்குமார், 26, ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, 800 போதை மாத்திரைகள், இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் 75,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement