திருப்பூருக்கு மத்திய அரசு செய்தது என்ன? பட்டியலிட்டார் அண்ணாமலை
திருப்பூர்:பல்லடம் அ.தி.மு.க. வேட்பாளர் பரமசிவம், திருப்பூர் தெற்கு பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ், திருப்பூர் வடக்கு அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன், அவிநாசி பா.ஜ. வேட்பாளர் முருகன் ஆகியோரை ஆதரித்து பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
மத்திய அரசின் சார்பில், திருப்பூரில் மட்டும், திருப்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளுக்காக, 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை-- திருப்பூர்- -கரூர் இடையிலான சாலைப் பணிகளுக்காக, 322 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.அம்ருத் திட்டத்தின் கீழ், திருப்பூரில் 349 கோடி ரூபாய் மதிப்பில், 30 வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 490 கோடி ரூபாயில், 28 வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஆயுஷ்மான் பாரத்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், திருப்பூரில் மட்டும், 2.04 பேர் தலா, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற்றுள்ளனர். இதில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 6,542 பேர். மாவட்டத்தில், 46 மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன; இங்கு மருந்து விலையில் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. உஜ்வாலா திட்டத்தில், திருப்பூரில் மட்டும், 55,000 இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
முத்ரா திட்டம்
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினருக்கு, 21,317 கோடி ரூபாய் கடன் உதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஏராளமான சிறு தொழில் முனைவோர் முத்ரா திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.மாவட்டத்தைச் சேர்ந்த, 63,000 விவசாயிகளுக்கு ஆண்டுதோறும், 6,000 ரூபாய் வீதம், 316 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மட்டும் திருப்பூரில் 14,466 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 4,000 எக்டர் நிலப்பரப்பு மற்றும், 6,050 விவசாயிகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர்.
ஜன்தன் திட்டம்
ஜன்தன் திட்டத்தின் கீழ், 5.93 பேருக்கு இலவச வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ், 1,573 க்கும் மேற்பட்ட வீடுகளில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.மத்திய அரசின் சார்பில், திருப்பூரில் மட்டும், திருப்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளுக்காக, 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை-- திருப்பூர்- -கரூர் இடையிலான சாலைப் பணிகளுக்காக, 322 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.அம்ருத் திட்டத்தின் கீழ், திருப்பூரில் 349 கோடி ரூபாய் மதிப்பில், 30 வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 490 கோடி ரூபாயில், 28 வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், திருப்பூரில் மட்டும், 2.04 பேர் தலா, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற்றுள்ளனர். இதில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 6,542 பேர். மாவட்டத்தில், 46 மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன; இங்கு மருந்து விலையில் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. உஜ்வாலா திட்டத்தில், திருப்பூரில் மட்டும், 55,000 இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ரூ.21, 317 கோடி கடன்
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினருக்கு, 21,317 கோடி ரூபாய் கடன் உதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஏராளமான சிறு தொழில் முனைவோர் முத்ரா திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.இங்குள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமமான அரசு அமைய வேண்டும் என்றால் மத்திய, மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 2021 முதல் 2026 வரை மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார். எனவே, தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. பொது செயலர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தால் மட்டுமே, தமிழகம் வளர்ச்சி பெறும்..
@block_B@ வாக்குறுதிகளை மறந்த தி.மு.க.
கடந்த. 2021 சட்டமன்ற தேர்தலின் போது, திருப்பூர் தொகுதி மக்களுக்காக தி.மு.க. அறிவித்த பல திட்டங்கள் இன்னும் காகித அளவிலேயே உள்ளன.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில், திருப்பூரில் சுற்றுச்சாலை அமைக்கப்படும்; பின்னலாடை ஆய்வு மையம், ஜவுளி பூங்கா அமைக்கப்படும். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அரசு சட்டக்கல்லுாரி துவங்கப்படும்.திருப்பூரில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு தனித்தனி தங்கும் விடுதிகள் கட்டி தரப்படும். நொய்யல் ஆற்றின் குறுக்கே வஞ்சிபாளையத்திலிருந்து காசிபாளையம் வரை, பாலம் கட்டப்படும் என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. - அண்ணாமலை, பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் --- block_B
மேலும்
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு
-
தேர்தலுக்கு 13 நாட்கள் தான்; தமிழக அரசியல் களம் தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? சீமான் பளீச் பதில்!
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
-
பாண்டியாறு-பவானி நதி இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை பா.ஜ., வேட்பாளர் முருகன் வாக்குறுதி
-
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று உற்சாகம்