அ.தி.மு.க. வேட்பாளர் வெல்ல வீடு வீடாக பிரசாரம்: பா.ஜ.

பல்லடத்தில், நகர பா.ஜ. சார்பில், தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் மணி தலைமை வகித்தார். மண்டல தலைவர் பன்னீர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். மண்டல பொதுச்செயலாளர் கோகுலகிருஷ்ணன் வரவேற்றார்.

பல்லடம் அ.தி.மு.க., வேட்பாளர் பரமசிவம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற, பா.ஜ., நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணி ஆற்ற வேண்டும். பல்லடம் நகரப் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும், வீடு வீடாகச் சென்று, பிரதமரின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து ஓட்டு சேகரிக்க வேண்டும்.

தி.மு.க., அரசின் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உள்ளிட்ட வரி உயர்வுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மண்டல பொதுச்செயலாளர் சந்தான கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement