மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிஷா மாநிலங்களின் மேல் வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரியில், இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில், நாளை மறுநாள் முதல், அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement