அம்பேத்கர் பிறந்த நாள் கட்சியினர் மரியாதை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி கட்சியினர், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு, தி.மு.க., சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகர செயலாளர்கள் சக்கரை, வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க., சார்பில், நகர செயலாளர் ராமதாஸ் தலைமையில், சிலைக்கு மாலை அணிவித்தனர். மாநில எம்ஜிஆர் மன்றம் சங்கர், மாணவரணி சக்திவேல், மருத்துவரணி முத்தையன், ஜெ.,பேரவை ரகுநாதன், செங்குட்டுவன், குமரன், தங்கசேகர், மகளிரணி பத்மப்பிரியா, கவிதா, கோதண்டராமன், திருப்பதி பாலாஜி பங்கேற்றனர்.

காங்., சார்பில் மாவட்ட தலைவர் சிவா தலைமையில், திரளான நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்துனர். வி.சி., மாவட்ட செயலாளர் பெரியார் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், மா.கம்யூ., நா.த.க.,வினர் மாலை அணிவித்தனர்.

திண்டிவனம் திண்டிவனத்தில் அலுவலகம் எதிரில், விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரங்கபூபதி தலைமையில் நகர பொறுப்பாளர் சத்தீஷ்குமார், நிர்வாகிகள் சீத்தாராமன், கோவிந்தன், புலிமணி, வழக்கறிஞர்கள் விஜயன், சிவா பங்கேற்றனர்.

Advertisement