அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் முத்தான திட்டங்கள் வந்து சேரும்: வேட்பாளர் விஜயா சுரேஷ்பாபு உறுதி

விழுப்புரம்: விழுப்புரம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் விஜயா சுரேஷ்பாபு கோலியனுார் ஒன்றியத்தில் தீவிர பிரசாரம் செய்தார்.

கோலியனுார் ஒன்றியம், ஜானகிபுரம், கண்டமானடி உட்பட பல்வேறு கிராம பகுதிகளில் ஓட்டு சேகரித்து அவர் பேசுகையில், 'அ.தி.மு.க., ஆட்சி வந்தவுடன் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய், பிரிட்ஜ் வந்து சேருவதோடு, மகளிர் உரிமை தொகை மாதம் 2,000 ரூபாய் பெண்களின் வங்கி கணக்கில் வந்து சேரும்.

இது மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கான முத்தான திட்டங்கள் வந்து சேர அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து ஆதரவு தர வேண்டும்' என்றார்.

ஒன்றிய கவுன்சிலர் ராஜீ, கிளைச் செயலாளர்கள் மலரழகன், சரவணன், இளைஞரணி செயலாளர் ரமேஷ், துணைச் செயலாளர் மஞ்சுளா சசிக்குமார், இணை செயலாளர் சீத்தா கலியபெருமாள், இளைஞரணி ஒன்றிய செயலாளர் ரவி.

பா.ம.க., ஒன்றிய செயலாளர் முருகன், பாக்கியராஜ், வன்னிய சங்க பேரவை சசிக்குமார், அ.தி.மு.க., தொழிற்சங்க பேரவை செயலாளர் தங்க பாண்டியன், மகளிரணி செயலாளர் தமிழ் கருணா, சிறுபான்மை பிரிவு செயலாளர் கமருதீன், நிர்வாகிகள் சபரிநாதன், மணிகண்டன், முத்துகிருஷ்ணன், ஜீவா, பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement