கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை: மலை காய்கறி தோட்டம் சேதம்

குன்னுார்: குன்னுார் தேனலை, சோகத்தொரை கிராமங்களில் உலா வரும் ஒற்றை காட்டு யானை காய்கறி தோட்டங்களை சேதம் செய்து வருகிறது.

குன்னுார் மேட்டுப்பாளையம் ரன்னிமேடு பகுதியில் கடந்த, 2 வாரங்களாக 11 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவை கிளண்டேல், உலிக்கல் பகுதிகளில் உலா வந்ததுடன் மீண்டும் ரன்னிமேடு பகுதியில் முகாமிட்டுள்ளது. இதே போல், கடந்த, 2 நாட்களாக தேனலை, சோகத்தொரை கிராமத்திற்குள் புகுந்த கொம்பன் ஒற்றை யானை காய்கறி தோட்டத்தில் புகுந்து விளை பொருட்களை சேதம் செய்தது. தேயிலை தோட்டத்திற்குள் புகுந்ததால் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க செல்ல முடியாமல் உள்ளனர்.வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Advertisement