ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட பணம் பறிமுதல்

பந்தலுார்: ஆவணங்கள் இன்று எடுத்துச் செல்லப்பட்ட, 70 ஆயிரம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பந்தலுார் அருகே சோலாடி முதல் கூடலுார் பகுதி வரை தேர்தல் பறக்கும் படை அலுவலர் பூபாலன் தலைமையிலான குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இரும்புபாலம் பகுதியில், கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு, காரில் சென்ற வண்டூர் பகுதியை சேர்ந்த சக்கீர்உசைன் என்பவர், 70 ஆயிரம் ரூபாய், வைத்திருந்தது தெரியவந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், பணத்தை கூடலுார் ஆர்.டி.ஓ. குணசேகரனிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை வழங்கி பணத்தை திரும்ப பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

--

Advertisement