வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 13) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 14,060 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 14,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.வெள்ளி விலை ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 13) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 14,060 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
வாரத் தொடக்க முதல் நாளை கம்மியாக குறைந்திருக்கிறதுமேலும்
-
ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; கர்நாடகா பக்தர்கள் 8 பேர் பலி
-
உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு
-
உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்: டைம் இதழ் பட்டியலில் இந்தியர்கள் யார் யார்?
-
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏற்றி முதல்வர் ஸ்டாலின் போராட்டம்
-
ஓசையின்றி குடிநீர் கட்டணம் உயர்வு; வீட்டு உரிமையாளர்கள் புகார்