திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனை இண்டி கூட்டணி கட்சிகள் முற்றுகை
புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இண்டி கூட்டணி கட்சியினர் திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. மண்ணாடிப்பட்டு தொகுதியில் வெளியூர்களை சேர்ந்தவர்களை கொண்டு தகராறில் ஈடுபட்டதாகவும், மண்ணாடிப்பட்டு ஓட்டுச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக பிடிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இண்டி கூட்டணி கட்சியினர் நேற்று இரவு திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, இண்டி கூட்டணி கட்சியினர் தகராறில் ஈடுபட்டவர்கள், கள்ள ஓட்டு போட முயன்றவர்கள் மீது புகார் அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால், திருக்கனுார்- விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
மேலும்
-
தேர்தலுக்கு 13 நாட்கள் தான்; தமிழக அரசியல் களம் தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? சீமான் பளீச் பதில்!
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
-
பாண்டியாறு-பவானி நதி இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை பா.ஜ., வேட்பாளர் முருகன் வாக்குறுதி
-
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று உற்சாகம்
-
முன்னாள் கலெக்டர் கிராந்திகுமாருக்கு கோவையில் இன்னமும் இருக்கு ஓட்டு