உறவினரை முதல்வராக்க மம்தா முயற்சி: அமித்ஷா
மெதினிப்பூர்: '' மேற்கு வங்கத்தில் தனது உறவினர் அபிஷேக் பானர்ஜியை முதல்வர் ஆக்குவதில் மம்தா தீவிரம் காட்டி வருகிறார்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு மெதினிப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: ஊடுருவல்காரர்களை பாதுகாக்க மம்தா விரும்புகிறார். பாஜ அவர்களிடம் இருந்து மாநிலத்தை பாதுகாக்கும். மம்தா என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், ஊடுருவல்காரர்கள் நிச்சயம் மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
மம்தாவுக்கு ஆதரவாக வன்முறையில் இறங்குபவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். மே 5 ம் தேதிக்கு பிறகு நீங்கள் எங்கு செல்வீர்கள். பாஜ அரசு அமைய உள்ளது. அதன் பிறகு, மக்களை தொந்தரவு செய்பவர்கள், சிறைக்கு செல்வார்கள். ஊழல், பணம் குறைப்பு, பிரதமர் மோடி அரசுக்கு எதிர்ப்பு ஆகியவையே இங்குள்ள மக்களுக்கு பிரச்னை.
யரும் கவலைப்பட வேண்டாம். மே 5 ம் தேதிக்கு பிறகு, மகளிருக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கும் மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்குவோம்.
மம்தா பானர்ஜி தனது உறவினர் அபிஷேக் பானர்ஜியை முதல்வர் ஆக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், பாஜ இங்கு ஆட்சிக்கு வந்தால், டில்லியில் இருந்து ஆட்சி செய்வார்கள் எனக்கூறி வருகிறார். பாஜ ஆட்சிக்கு வந்தால் , மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜ தொண்டர் தான் முதல்வர் ஆவார் என இங்கிருந்த மக்களிடம் சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
மேலும்
-
சட்டசபை தொகுதி வாரியாக அலுவலர்கள் பணி ஒதுக்கீடு
-
வாக்காளர் விழிப்புணர்வு
-
ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
-
நலம் மருத்துவமனையில் கேன்சர் சிகிச்சை மையம் திறப்பு விழா
-
ஸ்டாலின் பொதுக்கூட்டத்திற்கு இடம் தேடும் தி.மு.க.,வினர்
-
100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு பேரணி