சிவகாசி சிவன் கோயில் மாட வீதியில் குழாய் உடைந்து குடிநீர் வீண்

சிவகாசி:சிவகாசி சிவன் கோயில் வடக்கு மாட வீதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. சிவன் கோயில் வடக்கு மாட வீதியில் குழாய் உடைந்து குடிநீர் முழுவதும் வீணாக ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது. கோடைகாலம் துவங்கிய நிலையில் குடிநீர் தேவை அதிகரிக்கும். எனவே உடனடியாக சேதம் அடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement