இணையத்தில் ஜனநாயகன் திரைப்படம்: ரஜினி, கமல் கண்டனம்

12

சென்னை: தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.


தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடித்து வெளியாக தயாராகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். விஜயின் கடைசி படம் என்ற அறிவிப்பால், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால், படம் வெளியாவதற்கு பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் முழுதும் 'டெலிகிராம்' செயலியில் வெளியாகி, தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது. இவ்வாறு அந்தப்பதிவில் ரஜினி கூறியுள்ளார்.


@twitter@https://x.com/rajinikanth/status/2042621670465376520twitter

சிஸ்டம் தோல்வி



கமல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது
ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது விபத்து அல்ல. அது ஒரு சிஸ்டம் தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது. உரிய சட்ட நடைமுறைகள் சரியான நேரத்தில் பின்பற்றப்பட்டு இருந்தால் நாம் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டோம். சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், திருட்டுப் பிரதிகளுக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கின. சட்டப்பூர்வமான அணுகல் தடைபடும்போது, சட்டவிரோத நடவடிக்கைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
பைரசி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அது கலை மற்றும் கலைஞர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல். அது, நூற்றுக்கணக்கான கலைஞர்கள், தொழில்நுட்பநிபுணர்களின் உழைப்பையும், தயாரிப்பாளர்கள், சினிமா திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் முதலீடுகளை ஆபத்தில் ஆழ்த்துகிறது. அமைப்பு தோல்வியடையும்போது படைப்பாளியை யார் பாதுகாப்பார்கள்? விரைவான சான்றிதழ் வழங்குதல், கடுமையான அமலாக்கம் தேவை. கடந்த காலத்தில் எனக்குத் துணையாக நின்றதைப் போலவே, உண்மையான சினிமா ரசிகர்கள் ஒன்றிணைந்து, சட்டப்பூர்வமாக திரையரங்குகளில் இப்படத்தைப் பார்த்து தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.



@twitter@https://x.com/ikamalhaasan/status/2042644301872796082twitter

Advertisement