உங்களில் ஒருவனாக இருந்து பிரச்னைகளை தீர்ப்பேன்: த.வெ.க., வேட்பாளர் வாக்குறுதி
காஞ்சிபுரம்:''உங்களில் ஒருவனாக இருந்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன்,'' என, த.வெ.க., வேட்பாளர் ரஞ்சித்குமார் வாக்குறுதி அளித்து, பொது மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
காஞ்சிபுரம் சட்டசபை தொகுதி த.வெ.க., வேட்பாளர் ரஞ்சித்குமார் நேற்று காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில் பிரசாரம் தொடங்கினார். பஞ்சுபேட்டை, சந்தவெளியம்மன்கோவில் தெரு, கைலாசநாதர் பத்தேரி தெரு, ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, அரக்கோணம் சாலை, சங்கர மடம், புதிய ரயில் நிலையம், பூக்கடை சத்திரம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, சுப்புராயர் தெரு, பல்லவர் மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், த.வெ.க., நிர்வாகிகளுடன் ஓட்டு சேகரித்தார். இந்த பிரசாரத்தின் போது, த.வெ.க., தேர்தல் அறிக்கை குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில், த.வெ.க., வேட்பாளர் ரஞ்சித்குமார் பேசியதாவது:
ஒலிமுகமதுபேட்டை பகுதிக்கு, சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீரை, பாதாள சாக்கடை குழாய் மூலமாக வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யப்படும். உங்களில் ஒருவனாக இருந்து, அனைத்து வசதிகளையும் மேம்படுத்த உறுதுணையாக இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
நலத் திட்டங்களைக் கொண்டு வருவேன்: தி.மு.க., வேட்பாளர் வசந்தவேல் உறுதி
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை அளிப்பதை நிறுத்த மத்திய அரசு கடிதம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
காலாவதியான சாக்லெட் சாப்பிட்ட 14 மாணவ, மாணவிகள் 'அட்மிட்' :கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு
-
முதல் கையெழுத்தில் ரூ.8 ஆயிரம் :தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
-
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் :அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு உறுதி
-
விவாகரத்து வழக்கிற்கு கோர்ட் வந்த கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி ;உளுந்துார்பேட்டை கோர்ட்டில் பரபரப்பு