ரயில் சரக்கு போக்குவரத்து வருவாய் ரூ.337 கோடியாக அதிகரிப்பு
சேலம்; சேலம் ரயில்வே கோட்டத்தில், 2024 - 25ம் நிதி-யாண்டில், 28.50 லட்சம் டன்னாக இருந்த சரக்கு போக்குவரத்து, 2025 -- 26ம் நிதியாண்டில், 32.20 லட்சம் டன்னாக உயர்ந்தது. இதன்மூலம் கடந்த ஆண்டு, 305.83 கோடி ரூபாயாக இருந்த சரக்கு போக்குவரத்து வருவாய், தற்போது, 10.3 சதவீதம் அதிகரித்து, 337.32 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
குறிப்பாக பெட்ரோலிய பொருட் கள், சிமென்ட், இரும்பு உள்ளிட்டவை நாட்டின் பல்வேறு பகுதிக-ளுக்கு அனுப்பப்படுகின்றன. அதில் இருகூரிலி-ருந்து அதிகபட்சம், 20.80 லட்சம் டன் பெட்ரோ-லிய பொருட்கள் ஏற்றப்பட்டு, அதன்மூலம், 256.50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.
கரூர் அருகே பாளையம், வீரராக்கியம் மற்றும் சங்ககிரியில் இருந்து, 2.73 லட்சம் டன் சிமென்ட் கையாளப்பட்டு, 13.13 கோடி ரூபாய்; மேச்சேரி சாலையில் இருந்து, 1.52 லட்சம் டன் இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்கள் ஏற்றப்பட்டு, 16.94 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.'பார்சல்' சேவையிலும், 2024 - -25ம் ஆண்டில், 51,130 டன்னாக இருந்த பார்சல் கையாளுதல், 2025 - -26ம் ஆண்டில், 22.02 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 62,387 டன்னாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் பார்சல் வருவாயும், 21.49 கோடியில் இருந்து, 25.47 கோடி ரூபாயாக அதிக-ரித்துள்ளது.
'பார்சல்' சேவையை பொறுத்த வரை, கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காய்கறி, பழங்கள் மற்றும் கிரைண்டர், மோட்டார் போன்ற இன்ஜினியரிங் பொருட்கள், திருப்பூரில் இருந்து பின்னலாடை ரகங்கள், ஈரோட்டில் இருந்து முட்டை பார்சல்கள், நாட்டின் பல்வேறு மாநி-லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை தவிர மேட்டுப்பாளையம், போத்தனுார், சேலம், கரூரில் இருந்தும் பல்வேறு வகை பார்சல்கள், ரயில்கள் மூலம் அனுப்பப்படுகின்றன. இத்தக-வலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரி-வித்துள்ளது.
மேலும்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
-
தி.மு.க., ஆட்சியில் 5 ஆண்டு சாதனைகள்: காஞ்சியில் வேட்பாளர் நித்யா சுகுமார் பிரசாரம்
-
உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு