பால் கொள்முதல் விலை உயர்த்தக்கோரி தர்ணா

ஆத்துார்; சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே பெரியகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள், விவசாய அமைப்பினர் நேற்று, பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி, ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், வருவாய்த்துறையினர், போலீசார் பேச்சு நடத்தியதில் சமாதானம் அடைந்த அவர்கள், தொடர்ந்து, ஆர்.டி.ஓ., தமிழ்மணி-யிடம், கோரிக்கை மனு
கொடுத்தனர்.


தொடர்ந்து விவசாயிகள், 'அத்தியாவசிய பொருட்கள், தீவன விலை உயர்வால், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். பசும்பால் லிட்டருக்கு, 45 ரூபாயாக வழங்க வேண்டும். வேளாண் துறையில் மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைய ஆய்வு செய்ய வேண்டும். இத்திட்டங்களில் முறைகேடு நடப்பதால் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement