2 கிலோ தங்கம் மோசடி தம்பதி உள்பட 4 பேர் கைது

சேலம்; சேலம், செவ்வாய்ப்பேட்டை, பங்களா தெருவை சேர்ந்தவர் காஜா ெஷரிப், 38. இவர், கோட்டை வணிக வளாகத்தில், நகை கடை வைத்துள்ளார். அங்கு லைன்மேடு, பென்சன் லைன் பகுதியை சேர்ந்த ஆயிஷாபேகம், 25, என்பவர், விற்பனை மற்றும் கணக்கு வழக்குகளை கவனித்து வந்தார். 2025 நவ., 25ல், நகை விற்பனையை சரிபார்த்த போது, 2 கிலோ, 300 கிராம் நகை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்-தபோது, ஆயிஷாபேகம், நகைகளை சிறுக, சிறுக திருடிச்சென்றது தெரிந்தது. விசாரணையில் அவர், நகைகளை இன்னொரு கடையில் விற்று, அந்த பணத்தை, சக ஊழியர்கள், குடும்ப உறுப்பி-னர்களுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டார். அத்-துடன் திருடியதில், 116 கிராம் தங்கத்தை மட்டும் திருப்பி கொடுத்து மீதி, 2.184 கிலோ நகையை பிறகு தருவதாக கூறினார்.ஆனால் சொன்னபடி நகையை தராமல் ஏமாற்-றினார். இதுதொடர்பாக காஜா ெஷரிப் புகார்படி, சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, ஆயி-ஷா பேகம், அவரது கணவர் தஸ்தகீர், 33, மும்தாஜ், 53, அன்னதானப்பட்டி, எஸ்.ஆர்.எம்., தோட்டத்தை சேர்ந்த பாபுகான், 52, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.

Advertisement