ரேவதி மெடிக்கல் சென்டரில் நாளை இருதய மருத்துவ முகாம்

திருப்பூர்: திருப்பூர் குமார் நகரில் உள்ள, ரேவதி மெடிக்கல் சென்டர் வளாகத்தில், நாளை(12ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை இலவச இருதய மருத்துவ முகாம் நடக்கிறது.

முன்னணி இருதய நிபுணர்கள் டாக்டர் சிவ விக்னேஷ், டாக்டர் அசோக்குமார் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு நேரடிப்பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகளை வழங்குவர்.

ஆயிரத்து 700 ரூபாய் மதிப்புள்ள பரிசோதனைகள், 200 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. சர்க்கரை அளவு பரிசோதனை, இருதய சுருள் பட பரிசோதனை, கிரியேட்டினின் பரிசோதனை, எக்கோ ஸ்கிரீனிங், இருதய நிபுணர் ஆலோசனை, உணவியல் நிபுணர் ஆலோசனை போன்றவை அடங்கும். ஆஞ்சியோகிராம் பரிசோதனை 9999 ரூபாய் சிறப்புக்கட்டணத்தில் வழங்கப்படும்.

ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் அறுவை சிகிச்சைகளுக்கும் சலுகை வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தகவல்களுக்கு: 98422 09999, 98422 11116.

Advertisement