பீட்ரூட் தோட்டத்தில் களை எடுக்கும் பணி :விவசாயிகள் ஈடுபாடு

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் பீட்ரூட் தோட்டத்தில் களை எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பு போகத்தில், நெடுகுளா, ஈளாடா, கதகுதொரை, கூக்கல்தொரை மற்றும் கட்ட பெட்டு உள்ளிட்ட பணிகளில், கணிசமான பரப்பளவில் பீட்ரூட் பயிரிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.

தண்ணீர் பாய்ச்சிய தோட்டங்களில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு, மழை பெய்த நிலையில், ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், பயிர் அடர்த்தியை குறைத்து, களை எடுத்து உரமிடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, மேட்டுப்பாளையம் மண்டிகளில், பீட்ரூட் ஒரு கிலோவுக்கு, 30 முதல், 35 ரூபாய் கருத்திற்கு ஏற்ப விலை கிடைக்கிறது. இந்த விலை, கடந்த மாதத்தை காட்டிலும், ஓரளவு ஆறுதலாக உள்ளது. எதிர்வரும் நாட்களில், நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதால், விவசாயிகள் தோட்ட பராமரிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisement