சித்தி புத்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
நெகமம்: நெகமம், சித்தி புத்தி விநாயகர் கோவிலில் நாளை (12ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.
நெகமம், காந்திநகரில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில், கடந்த 1ம் தேதி யாகசாலை முகூர்த்தக்கால் அமைக்கும் பணியுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இன்று, காலை 7:00 மணிக்கு, மகா கணபதி ஹோமம், 8:00 மணிக்கு, தீர்த்தம் எடுக்க புறப்படுதல், மாலை 5:00 மணிக்கு, வாஸ்து சாந்தி ஹோமம், இரவு, 8:00 மணிக்கு, யாக சாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, வேதிகார்ச்சனை, வேதப்பாராயணம் நடக்கிறது. இரவு, 10:00 மணிக்கு, விமான கோபுர கலசம் நிறுவுதல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.
நாளை, 12ம் தேதி, காலை, 5:30 மணிக்கு, மங்கள இசை, அஷ்ட லட்சுமி பூஜையும், அதன்பின், இரண்டாம் கால யாக பூஜையும் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு, பூர்ணாஹுதி, கடங்கள் புறப்பாடு, 8:30 மணிக்கு விமான கோபுர மகா கும்பாபிஷேகம், மூலாலய மகா கும்பாபிஷேகம் தீபாராதனை நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மேலும்
-
இணையத்தில் ஜனநாயகன் திரைப்படம்: ரஜினி வேதனை
-
எனக்கு 'சீட்' வாங்கி தந்தது டி.வி.எஸ்., தான்:உளறிய ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர்
-
எந்தெந்த தடங்களில் மினி பஸ்கள் தேவை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு
-
தில்லை கங்கா நகரில் மேம்பாலம் அமைக்கப்படும்: அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் வாக்குறுதி
-
விளையாட்டு சர்வதேச நீச்சல் போட்டி: சென்னை வீரர் அசத்தல்
-
அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம் தேதி மாற்றம்