தபால் ஓட்டை பிரித்து பார்த்து தி.மு.க.,வினரிடம் கூறிய அலுவலர்
சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், ஒடுவன்பட்டி ஊராட்சி சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார், 42; மாற்றுத்திறனாளி. ஏப்., 13ல் இவர், வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு பதிவு செய்தார்.
ஓட்டுப்பதிவு அலுவலர், ஓட்டு சீட்டை பெட்டியில் போடுவதற்கு முன்பாக, அதை பிரித்து, முத்துக்குமார் யாருக்கு ஓட்டளித்தார் என்பதை பார்த்துள்ளார். அதை, தி.மு.க.,வினரிடம், அலுவலர் கூறியதாக முத்துக்குமார் வேதனையில் உள்ளார்.
இதுகுறித்து முத்துக்குமார் கூறியதாவது: ஓட்டு சீட்டில் எனக்கு பிடித்த சின்னத்தில் ஓட்டளித்து, அதை மடித்து அலுவலரிடம் கொடுத்தேன். அவர், 'சீட்டை பிரித்து, நான் யாருக்கு ஓட்டளித்தேன்' என பார்த்தார்.
பின், என்னை பார்த்து சிரித்தார். எனக்கு, அப்போதே நெருடலாக இருந்தது. நேற்று, தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர், ஏன் எங்களுக்கு ஓட்டு போடவில்லை என கேட்டு என்னை மிரட்டினர்.
'நான் யாருக்கு ஓட்டளித்தேன்' என்பது எனக்கும் ஓட்டுப்பதிவு அலுவலருக்கும் மட்டுமே தெரியும். அவர்தான், என் ஓட்டு ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது ஜனநாயகதிற்கு வந்த கொடுமை, அவர் வேலையை இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் . டம்ளக் பணம் கொடுத்தா அவனுங்க பண்ற ஆட்சி நல்ல இல்ல அப்படினா வேற புதுசா வரவங்களுக்கு சான்ஸ் கொடுப்பதுதான் கரெக்ட் . டம்ளக் அவனுங்க அப்பா விட்டு பணத்தையா கொடுகராகுங்க எல்லாம் நம்ம வரி பணம் புரியுதா மற் .x
உங்களுக்கு மட்டும் இல்லை ஊரில் உள்ள 4/நான்கு ஓட்டுக்களும் அவரே போட்டு இருக்கார்.....
தேர்தல் அதிகாரி அமைச்சரின் இனமாம்
எனது 85 வயது தாயார் வீட்டில் தனியாக இருக்கும் போது, தேர்தல் அதிகாரி, போலீஸ், திமுகவினர் சகிதம் வந்து, அதிகாரிகள் முன்னிலையிலேயே 1000₹ பணத்தை கொடுத்து, கையெழுத்து மட்டும் வாங்கிக் கொண்டு, திமுககாரனே எனது தாயாருக்கான வாக்குச்சீட்டில், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு திமுக சின்னத்தில் ஓட்டு போட்டு தேர்தல் அதிகாரியிடம் கொடுத்திருக்கிறான். பின்பு
அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆமாம் மாற்று திறனாளிகளுக்கு தீய முக தன் சொந்த பணத்தை எடுத்து உதவி செய்கிறது. இதற்கு முன்பு முதியோர் உதவி தொகை மாற்று திரானளி உதவி தொகை என்று எதுவும் கொடுக்க படவில்லை. இதுவும் மாடலின் கண்டுபிடிப்பு. அதுசரி மாற்று திறனாலி என்றால் அவர்கள் க்கு சொந்தமா கருத்து இருக்க கூடாது. அரசு அவர்கள் சொந்தமா உழைத்து முன்னேற வழி ஏற்படுத்தி தர கூடாது ன்னு சட்டம் இருக்கா. 50 ஆண்டு திராவிட ஆட்சி க்கு பின்னும் மக்கள் பொருளாதார சிக்கல் தீரவில்லை எனில் காரணம் யார்
திருட்டுக்கூட்டம். என்ன சொல்வது
அந்த கேடு கெட்ட அலுவலரை நடுரோட்டில் நிற்க வைத்து அடிக்க வேண்டும்.
ஆகுயர்த்தோன் அப்பாவி ஓவியா விஜய் K L ராகவன் மேலான கருத்துக்களை பதிவிடவும்....
₹200 வாங்க அறிவாலயம் சென்றுள்ளனர்.
Thats called Loyalty
முறைகேடுகளின் மொத்த உருவம் திமுக
மானங்கெட்ட அலுவலர் ...கீழ்த்தரமான செயலுக்கு அதிபதிகள் இந்த திருட்டு திராவிட ஆதரவு அரசு ஊழியர்கள் ..மேலும்
-
இன்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்கிறது; தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவு
-
சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள்; முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு
-
திமுக நிர்வாகி காரில் ரூ.2.44 கோடி சிக்கியது
-
ஓட்டுச்சாவடிகளில் பல வண்ணங்களில் குறியீடு; வாக்காளர்களின் சிரமத்தை தவிர்க்க ஏற்பாடு
-
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் தான்; துல்லிய கருத்துகணிப்புகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
உங்கள் ஓட்டுச்சாவடி, பாகம் எண் வரிசை எண்ணை அறிவது எப்படி?