ரேஷன் அரிசி கடத்திய இருவருக்கு 'குண்டாஸ்'
தேனி:அரிசி கடத்தலில் ஈடுபட்ட கம்பம் சுப்பிரமணிய கோயில் தெரு குமரேசன் 48,அல்லிநகரம் ஹைஸ்கூல் தெரு சக்திகுமார் 33, ஆகிய இருவரை மார்ச்சில் உத்தமபாளையம் உணவுக்கடத்தில் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3.1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சினேப்பிரியா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவில் குமரேசன், சக்திகுமாரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement