இடுக்கி மாவட்டத்தில் 77.02 சதவீதம் ஓட்டுப் பதிவு
மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் 77.02 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக மாவட்ட நிர்வாகம்oஇரவு 7:00 மணிக்கு வெளியிட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், உரும்பன்சோலை, பீர்மேடு, இடுக்கி, தொடுபுழா ஆகிய சட்டசபை தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது. காலை 7:00 மணிக்கு ஓட்டு பதிவு துவங்கியது. நகர், கிராம புற பகுதிகளை விட மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களில் ஆர்வமுடன் ஓட்டளித்தனர். மாவட்ட நிர்வாகம் நேற்று இரவு 7:00 மணிக்கு வெளியிட்ட தகவலின்படி 77.02 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. 2021 தேர்தலில் 70.38 சதவீதம் ஓட்டுகள் பதிவான நிலையில் தற்போது 6.64 சதவீதம் அதிகரித்தது.
தேவிகுளம் தொகுதியில் இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிடும் ' சிட்டிங்' எம்.எல்.ஏ. ராஜா குண்டளை எஸ்டேட், புதுக்குடி டிவிஷனில் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியில் ஓட்டளித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராஜேந்திரன், மூணாறு ஊராட்சி அலுவலக வளாகத்தில் ஓட்டளித்தார். ஐக்கிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் எப்.ராஜா, பள்ளிவாசல் எஸ்டேட், பாக்டரி டிவிஷன் ஆரம்ப பள்ளியில் ஓட்டளித்தார்.
பாதிப்பு:
தேவிகுளம் தொகுதியில் பல ஓட்டு சாவடிகளில் ஓட்டு பதிவு இயந்திரங்கள் பழுதடைந்து ஓட்டு பதிவு பாதிக்கப்பட்டது. பள்ளிவாசல் எஸ்டேட்டில் ஓட்டு சாவடி எண் 152ல் மாதிரி ஓட்டு பதிவின் போது இயந்திரம் பழுதடைந்தது. அதனை உடனே சரி செய்து ஓட்டு பதிவு நடந்தது. கல்லார் எஸ்டேட்டில் ஓட்டு சாவடி எண் 37ல், ஓட்டு பதிவு இயந்திரம் பழுதடைந்து ஓட்டு பதிவு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மறையூர், அடிமாலி ஆகிய பகுதிகளிலும் ஓட்டு பதிவு இயந்திரங்கள் பழுதடைந்து ஓட்டுபதிவு பாதிக்கப்பட்டது.
வட்டவடை ஊராட்சியில் சாமியாரளா குடியில் ஓட்டு சாவடி எண் 95ல் கந்தசாமி பரமசிவன் என்ற பெயரில் இருவர் இருந்தனர். அதில் ஒருவர் முகவரி மாறி ஓட்டளித்தால், வேறொருவர் ' டெண்டர்' முறையில் ஓட்டளித்தார்.
தாமதம்:
ஓட்டளிக்கும் போது இயந்திரத்தில் இருந்து ' பீப்' சப்தம் சில நொடிகள் தாமதமாக வந்தது. அதனால் விரைவாக ஓட்டு பதிவு நடத்த இயலாத நிலை ஏற்பட்டு வாக்காளர்கள் வரிசையில் காத்திந்தனர்.
தொகுதி வாரியாக பதிவான ஓட்டு சதவீதம் தேவிகுளம் 77.52, உடும்பன்சோலை 79.49, பீர்மேடு- 77.42, இடுக்கி 75.32, தொடுபுழா - 75 .83. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் குறைந்ததால், தற்போது ஓட்டு பதிவு சதவீதம் அதிகரிக்க காரணம் என தெரியவந்தது.
மேலும்
-
அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
-
தி.மு.க.,வுக்கு பெண்கள் அமோக ஆதரவு: வால்பாறை தி.மு.க., வேட்பாளர் பெருமிதம்
-
பொரியல் தட்டை விலை உயர்வு
-
பைக்கில் சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் தங்க சங்கிலி பறிப்பு
-
மீண்டும் பஸ்கள் இயக்கக் கோரி துடியலுார் ஆர்.டி.ஓ., முற்றுகை
-
துணை ராணுவ படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு