வி.சி., அ.ம.மு.க., ரோடு ஷோ;தேனியில் போக்குவரத்து நெரிசல்
தேனி;தேனியில் நேற்று வி.சி., அ.ம.மு.க., வேட்பாளர்கள் ஓட்டு சேகரிப்பிற்கு வாகனங்களில் ரோடு ஷோ நடத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தேனியில் அ.ம.மு.க., வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் பங்களமேடு பகுதியில் வேனில் பிரசாரம் செய்தார். அவர் வருவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே ரோட்டின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அவர் பேசிவிட்டு அல்லிநகரத்திற்கு சென்றார். அவரை பின்தொடர்ந்து கார்களில் கட்சியினர் சென்றனர். மேற்கு சந்தை, ரயில்வே கேட் பகுதிகளில் பிற வாகன ஒட்டிகளை அச்சுருத்தும் விதமாக ஹாரன் அடித்தவாறே சென்றதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அல்லிநகரத்திலும் போக்குவரத்து நெரிலால் மக்கள் அவதி அடைந்தனர்.
வி.சி., வேட்பாளர் நகர்பகுதியில் ஓட்டு சேகரிக்க தி.மு.க., நிர்வாகிகளுடன் திறந்த வேனில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை பின்தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட கார்கள் சென்றன. மற்ற வாகனங்களை முந்தி செல்லாத வகையில் வேட்பாளருடன் வந்த வாகனங்கள் இயக்கியதால் தேனி நகராட்சி அலுவலகப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மேலும்
-
ஓட்டு கட்டட பள்ளிகள் சீரமைக்கப்பட வேண்டும்
-
வரத்து கால்வாயில் கழிவுநீர் தேங்கி புதர்மண்டியுள்ளது
-
தேர்தல் முடிந்ததும் தேக்கடியில் குவியும் சுற்றுலா பயணிகள்
-
திருச்சூருக்கு நேரடி பஸ் இயக்க இருமாநில மக்கள் கோரிக்கை
-
தரைமட்ட பாலத்தை உயர்த்த வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை
-
புதர் சூழ்ந்து வீணாகும் பொது கழிப்பிடம்