அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்

உடுமலை: உடுமலை அரசு மருத்துவமனையில், அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை வ.உ.சி., வீதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, உடுமலை தாலுகா மற்றும் கேரளா மறையூர் பகுதியிலிருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சை பெற வருகின்றனர்.

மேலும், விபத்துகளில் பாதிக்கப்பட்டோர், அடிதடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு தான் சிகிச்சை பெறுகின்றனர்.

இங்கு பொதுமக்கள், நோயாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைத்தால், இது தொடர்பாக தகவல்கள் சம்பந்தபட்டவர்களுக்கு தெரிவிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, இங்கு இதை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்

Advertisement