காய்கறி, பழம் பூக்களில் விழிப்புணர்வு கண்காட்சி
ராமநாதபுரம்: தோட்டக்கலைத் துறை சார்பில் ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் ஏப்.,23ல் சட்டசபை தேர்தலில் நுாறு சதவீதம் ஓட்டளிப்பது தொடர்பாக காய்கறிகள், பழங்கள், பூக்களால் வடிவமைக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு குறித்த கண்காட்சி நடந்தது.
இக்கண்காட்சி அரங்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார். நுாறு சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காய்கறிகள், பழங்கள், பூக்களை பயன்படுத்தி நுாறு சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி எழுத்துக்களை வடிவமைத்தனர்.
பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஆறுமுகம், உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் குழுவினர் பங்கேற்றனர்.-----
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?
-
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு வருகிறது டில்லியில் தடை
-
நம்ம பள்ளி...நம்ம வாத்தியார்... 600 பேப்பர். - நுாற்றாண்டு கடந்த பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி சாதனை மாணவர்களை உருவாக்கி அசத்தல்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா
Advertisement
Advertisement