மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவு: பிற இடங்களுக்கு அனுப்பும் பணி நிறுத்தம்
ஊட்டி: ஊட்டி மார்க்கெட்டில் மலை காய்கறி வரத்து, 3 டன்னாக குறைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா உட்பட வெளி மாநிலங்களுக்கும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகளை அறுவடை செய்த பின்னர் விவசாயிகள், ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக வரத்து அடியோடு குறைந்ததால் பிற இடங்களுக்கு காய்கறி அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.
வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜா முகமது கூறுகையில், ''ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்து உள்ளது. ஊட்டி மார்க்கெட் மண்டிகளுக்கு தினமும் , 10 டன் வரை காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தற்போது , 3 டன்னாக வரத்து குறைந்து உள்ளது,''என்றார்.
மேலும்
-
பிரதானக் கட்சி வேட்பாளர்களின் பிரசாரம்... கவருமா? 'கண்டுகொள்ளாமல்' கடக்கும் வாக்காளர்கள்
-
தமிழகத்திற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை: பா.ஜ., ராமஸ்ரீநிவாசன் கண்டனம்
-
பூ மார்க்கெட் விவகாரத்தில் தேர்தல் விதி மீறலா ?
-
திருப்புவனத்தில் ஹைபிரிட் வெள்ளரி சாகுபடி: நவீன தொழில்நுட்பத்தில் சாதிக்கும் விவசாயி
-
திருவாசகம் முற்றோதல் சிவனடியார்கள் உருக்கம்
-
இறந்தவர்கள், ஜெயிலுக்கு போனஆசிரியர்களுக்கு தேர்தல் பணி உத்தரவு: 'ஆப்சென்ட்' குறித்து விளக்கம் கேட்டபோது அதிர்ச்சி