சுற்றுலா பஸ் மோதி ஆட்டோ ஓட்டுநர் பலி
பாலக்காடு: பாலக்காடு -- கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா பஸ் ஆட்டோவில் மோதியதில், ஆட்டோ ஓட்டுநர் இறந்தார்.
கேரளா மாநிலம், பாலக்காடு ஒலவக்கோடு நீலிக்காடு பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத், 52.
நேற்று முன்தினம் மாலை நவ்ஷாத் தனது ஆட்டோவில் ஒலவக்கோட்டிலிருந்து முட்டிக்குளங்கரை நோக்கிச் சென்றார். அப்போது புதுப்பரியாரம் ஊராட்சி அலுவலகம் அருகே, செர்ப்புளச்சேரி பகுதியில் இருந்து ஏர்வாடி சென்ற சுற்றுலா பஸ், எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது.
இதில், ஆட்டோ முற்றிலும் உருக்குலைந்தது. படுகாயமடைந்த நவ்ஷாதை அங்கிருந்தவர்கள் மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். விபத்து குறித்து ஹேமாம்பிகா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மலைப்பாதையில் சாகச பயணம்; போலீசார் எச்சரிக்கை
-
குரங்குகளின் தொல்லையால் மக்கள் அவதி
-
செலவு கணக்கு முறையாக சமர்ப்பிக்க வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்
-
வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
-
வீடுகள் இடையே போதிய இடைவெளி இல்லை :ரூ. 18 கோடி அரசு திட்டத்தை ஆய்வு செய்யணும்
-
மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவு: பிற இடங்களுக்கு அனுப்பும் பணி நிறுத்தம்
Advertisement
Advertisement