சதமடிக்கும் வெயில் மக்கள் பாதிப்பு 

உடுமலை: கோடை வெயில் தாக்கம் முன்னதாகவே துவங்கி, சதமடித்துள்ளதால், மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

உடுமலை சுற்றுப்பகுதிகளில், வடகிழக்கு பருவமழை சீசனுக்குப்பிறகு, கோடை கால மழை பெய்யவில்லை. கோடை வெயிலும் முன்னதாகவே துவங்கி கொளுத்தி வருகிறது.

கடந்த இரு நாட்களாக வெப்பத்தின் தாக்கம் பல மடங்கு உயர்ந்துள்ளது. பகலில், உடுமலை பகுதியில், 100 டிகிரி பாரன்ஹிட் வரை வெப்பம் உணரப்படுகிறது.

வறண்ட காற்றும் வீசுவதால், பகலில் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். அதிக வெயிலால், விவசாய சாகுபடி பணிகளிலும், பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

Advertisement