உ.பி.,யில் 'வாக்கிங்' சென்ற வழக்கறிஞர் சுட்டுக்கொலை
மிர்சாபூர்: உத்தர பிரதேசத்தில் காலை நடை பயிற்சி சென்ற வழக்கறிஞரை, பைக்கில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுட்டு, கொலை செய்து தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.
உ .பி ., யின் மிர்சாபூரில் உள்ள கட்வாரு கா புரா பகுதியைச் சேர்ந்தவர் ராஜிவ் சிங், 45. மூத்த வழக்கறிஞரான இவர், அப்பகுதியில் நேற்று காலை வழக்கம்போல் நடை பயிற்சி சென்றார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர், ராஜிவ் சிங்கை துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் தப்பிச்செல்ல முயன்றபோது, அவர்களின் பைக் ஸ்டார்ட் ஆகாததால், பதற்றமடைந்தனர்.
இதற்கிடையே, துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது, கொலையாளிகள் அங்கு இருப்பதை பார்த்தவுடன் அவர்களை பிடிக்க முயன்றனர்.
ஆனால், துப்பாக்கியை காட்டி மர்ம நபர்கள் மிரட்டியபடி தங்கள் பைக்கை ஸ்டார்ட் செய்து தப்பிச்சென்றனர். முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர சோன்கர் என்பவர் கொலையாளிகளில் ஒருவர் என தெரியவந்தது.
உயி ரிழந்த ராஜிவ் சிங்கின் மனைவி பிரதீபா சிங்கிற்கும் ராஜேந்திர சோன்கருக்கும் இடையே, கிராம பஞ்சாயத்து தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, கொலையாளிகளை பிடி க் க மாவட்ட எஸ்.பி., அபர்ணா ரஜத் கவுசிக் தலைமையில், 5 தனிப் படைகள் அமைத்து, வழக்கு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.