மஹாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்

மும்பை: மஹாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில், மிதமான நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது.

மஹாராஷ்டிராவின் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில், நேற்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது, ரிக்டர் அளவில், 4.7 ஆக பதிவானது. இதன் தாக்கம், அண்டை மாவட்டங்களான நாண்டேட், பர்பானியின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம்அடைந்தனர்.

சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

கட்டடங்களில் சிறிய அளவிலான சேதங்கள் ஏற் பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement