இந்தியாவிடம் வீழ்ந்தது மங்கோலியா: பில்லி ஜீன் கிங் டென்னிசில்
புதுடில்லி: பில்லி ஜீன் கிங் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி 3-0 என, மங்கோலியாவை வீழ்த்தியது.
டில்லியில், பெண்கள் அணிகளுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ், 'ஆசிய-ஓசியானியா குரூப்-1' சுற்று போட்டிகள் நடக்கின்றன. இதில் இந்தியா, நியூசிலாந்து, தென் கொரியா, இந்தோனேஷியா, மங்கோலியா, தாய்லாந்து என, 6 அணிகள் பங்கேற்கின்றன.
முதல் போட்டியில் தாய்லாந்திடம் தோற்ற இந்தியா, 2வது போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் இந்தோனேஷியாவிடம் ஏமாற்றிய இந்தியா, நேற்று நடந்த 4வது போட்டியில் மங்கோலியாவை சந்தித்தது. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் ஜீல் தேசாய் 27, மங்கோலியாவின் அனு-விஜின் கான்டர் 15, மோதினர். அறிமுக போட்டியில் அசத்திய ஜீல் தேசாய் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் மிச்சுலபமாக வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சஹாஜா, மங்கோலியாவின் ஜர்கல் அல்டான்சர்னாய் மோதினர். இதில் சஹாஜா 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர், ருதுஜா ஜோடி 6-1, 6-0 என, மங்கோலியாவின் கோங்கோர்சுல் அல்டார்கிஷிக் ஜோடியை வீழ்த்தியது. முடிவில் இந்திய அணி 3-0 என 2வது வெற்றியை பதிவு செய்தது.
மேலும்
-
சமூக ஊடங்களில் தவறான கருத்து ஹரியானா டி.ஜி.பி., எச்சரிக்கை
-
உ.பி.,யில் 'வாக்கிங்' சென்ற வழக்கறிஞர் சுட்டுக்கொலை
-
திருக்கழுக்குன்றத்தில் நாயன்மார்கள் உத்சவம் அதிருப்தி தேர்தல் நாள் என போலீசார் அனுமதி மறுப்பு?
-
மதுவா அகதிகளுக்கு குடியுரிமை மே.வங்கத்தில் பா.ஜ., வாக்குறுதி
-
மஹாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்
-
குதுப்மினார், மெஹ்ராலி சாலையில் வாகன போக்குவரத்து இன்று மாற்றம்