வடக்கு தொகுதி பா.ம.க., வேட்பாளருக்கு பல்வேறு அமைப்பினர் சந்தித்து ஆதரவு

சேலம்: சேலம் வடக்கு தொகுதி, பா.ம.க., வேட்பாளராக சதாசிவம் போட்டியிடுகிறார். அவரை, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலர் வேலுமணி, அரவிந்த் ராஜா, மாநில கொள்கை பரப்பு துணை செயலர் விஷ்ணு பிரியா, நிர்வா-கிகள் ஜனா, சூர்யா, நாகராஜ், சக்தி வேல் உள்-ளிட்டடோர், வின்சென்ட் பகுதியில் நேற்று சந்-தித்து, ஆதரவு தெரிவித்தனர்.
அதேபோல் தமிழ்நாடு மாநில தலைவர் அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையத்தின் மாநில துணைத்தலைவர் மதுரம் தலைமையில் மாவட்ட தலைவர் முனியப்பன் உள்ளிட்டோரும், பா.ம.க., வேட்பாளர் சதாசிவத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.


தொடர்ந்து வேட்பாளர் சதாசிவம், 26வது டிவிஷன் சாமிநாதபுரம், மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று மாம்பழம் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ''சாலை, சாக்கடை, குடிநீர் உள்-ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன். மாம்பழம் சின்னத்தில் ஓட்ட-ளித்து, வெற்றி பெற செய்யுங்கள்,'' என்றார்.அ.தி.மு.க., அமைப்பு செயலர் சிங்காரம், பகுதி செயலர் மாரியப்பன், மகளிர் அணி செயலர் ஜமுனா ராணி, வார்டு செயலர்கள் ரவிக்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஓட்டு சேகரித்தனர்.

Advertisement