தி.மு.க.,வை வீழ்த்தவே இணைந்துள்ளோம்: காரைக்குடியில் தினகரன் பேச்சு
காரைக்குடி: ''அன்றைக்கு நாங்கள் பிரிந்தது தி.மு.க.,விற்கு கொண்டாட்டமாகி விட்டது. தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இணைந்துள்ளோம் ''என அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விலக்கில் அ.ம.மு.க., வேட்பாளர் தேர்போகி பாண்டியை ஆதரித்து பிரசாரம் செய்த தினகரன் பேசியதாவது:
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மீண்டும் ஜெ., ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும் என்பதற்காக அண்ணன் , தம்பிகள் மீண்டும் இணைந்துள்ளோம். அன்றைக்கு நாங்கள் பிரிந்ததால் தி.மு.க.,விற்கு கொண்டாட்டமாகிவிட்டது. 2021ல் நாங்கள் சேர்ந்திருந்தால் உறுதியாக ஜெ., ஆட்சி வந்திருக்கும். மத்திய உள்துறை அமைச்சர், என்னை அழைத்து, நீங்கள் எல்லோரும் ஒன்றாக இணைய வேண்டும் என்றார். அன்றைக்கு நான் அதற்கு சம்மதம் தெரிவித்தேன். ஆனால் அது நடக்கவில்லை.அந்த தேர்தலில் ஜெ., ஆட்சி வராதது எங்களுக்கு வருத்தம்.
இத்தேர்தலில் நாங்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும். ஜெ., ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு இணைந்துள்ளோம். கடந்த ஐந்தாண்டு தி.மு.க.,ஆட்சியில்
மூலை முடுக்கெல்லாம் கஞ்சா விற்பனை நடக்கிறது. தமிழகம் போதை மருந்து கலாசாரத்தில் சந்தையாக உள்ளது.
இதில் மாணவர்களை குறிவைக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
காமன்வெல்த் ஊழல்; காங்கிரஸ் தலைவர் சிக்கியது இப்படித்தான்!
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
-
தேர்தலுக்கு 10 நாட்கள் தான்; அனல் பறக்கும் கள தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்