மாற்றுத்திறனாளிகள் ஓட்டு அளிக்க 'சக்ஷம்' செயலியில் பதிவு செய்யலாம்
திருவள்ளூர்: ''திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க தேவையான வசதியை, 'சக்ஷம்' என்ற செயலியில் பதிவு செய்து பயன் பெறலாம்,'' என, கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருவள்ளர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சட்டசபை தேர்தல், வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம், மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட வசதியாக சக்கர நாற்காலி, ஓட்டுச்சாவடிக்கு வந்து செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வசதியை பெற, 'சக்ஷம்' என்ற செயலியில், மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்பதிவு செய்ய வரிசையில் நிற்க தேவையில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டையை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் காட்டி, விரைவாக ஓட்டுப்பதிவு செய்யவும், தேர்தல் ஆணையம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதை, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும்.
மேலும் விபரங்களுக்கு, கட்டணமில்லா தொலைபேசி எண் - 180425 08515 மூலம் தகவல் தெரிவிக்கலாம். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், கடுமையான பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஓட்டுச்சாவடிக்கு வர தேவையில்லை.
அவர்களின் வீட்டிற்கே தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சென்று, ஓட்டுப்பதிவை உறுதி செய்து பெற்று கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், தன்னார்வலர்களுடன் சக்கர நாற்காலி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா
-
தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்
-
தேர்தல் வாகன சோதனையில் ரொக்கப்பணம் பறிமுதல்
-
ஓடும்போது மயங்கிய டிரைவர் தோட்டத்தில் புகுந்த அரசு பஸ்