ஓட்டு பதிவு இயந்திரங்கள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி

கும்மிடிப்பூண்டி: ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாள்வது, அதில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்யும் முறைகள் குறித்து, மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில், தேர்தல் பணிகள் மேற்கொள்ள இருக்கும் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கும்மிடிப்பூண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நடந்த பயிற்சி வகுப்பில், 26 மண்டலங்களைச் சேர்ந்த மண்டல அலுவலர்கள், துணை அலுவலர்கள், உதவியாளர்கள் என, மொத்தம் 78 பேர் பங்கேற்றனர்.

பயிற்சி வகுப்பின் போது, ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் பட்டியலை பொருத்தி, 'சீல்' வைப்பது குறித்து விளக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஏற்படும் பிழைகளின் வகைகள், அதை சரிசெய்யும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. வரும் 15ம் தேதி ஓட்டுச்சாவடி பணியாளர்களுக்கு, மண்டல தேர்தல் அலுவலர்கள் வழங்க வேண்டிய பயிற்சிகள் குறித்தும் விளக்கப்பட்டது.

Advertisement