7.5 மருத்துவ இட ஒதுக்கீட்டில் பயனடைந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 71 மாணவர்கள்
பாலக்கோடு, :அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 மருத்துவ இட ஒதுக்கீட்டின் மூலம், கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 71 மாணவர்கள் பயனடைந்துள்ளதாக, பாலக்கோடு தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் அன்பழகன், நேற்று தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ., அன்பழகன், நேற்று பாலக்கோடு ஒன்றியம் ஜெர்த்தலாவ், பி.செட்டிஹள்ளி, அ. மல்லாபுரம் ஆகிய பஞ்.,களுக்கு உட்பட்ட, 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி, இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது, அவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதை தொடர்ந்து, அவர் பேசியதாவது;
பொய் பிரச்சாரங்களை முறியடித்து, மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், தமிழகத்தில் இ.பி.எஸ்., தலைமையில், அ.தி.மு.க., ஆட்சி அமைவது உறுதி. அவ்வாறு ஆட்சி அமைந்த உடன், அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு, 7.5 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். கடந்த, 2025-ல், தர்மபுரி மாவட்டத்தில், 683 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும், 532 மாணவர்கள், 7.5 இட ஒதுக்கீட்டின் மூலம் தேர்வான நிலையில், அதில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 71 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்திய அளவில் தமிழகம் உயர்கல்வி துறையில் சிறந்து விளங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின்போது, அ.தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், செந்தில், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், பா.ம.க., நிர்வாகிகள் கிருஷ்ணன், சேகர், மாதையன், பா..ஜ., நிர்வாகிகள் சங்கீதா, பெரிய சாமி, ராமகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும்
-
பெண்ணை வெட்டி உடலை கிணற்றில் வீசிய கொடூரம் * மூவரிடம் போலீஸ் விசாரணை
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தி.மு.க., பொய்ச்செய்தி: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
கள்ளக்குறிச்சி நகரில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி ஓட்டு சேகரிப்பு
-
புகார் பெட்டி
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி ஓட்டல்களில் உணவு விலை எகிறியது
-
சிதம்பரம் சர்ச்சில் ஓட்டு சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன்